சிலிண்டர் புக்கிங் செய்ய புதிய எண்: இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் அறிவிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங் செய்ய கட்டணமில்லா புதிய எண்ணை, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்ய 90922 23456 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும். அந்த எண்ணில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளைப் பின்பற்றி புக்கிங் செய்யலாம்.
இதைத் தவிர, இணையதளம் உள்ளிட்ட மின்னணு முறைகளிலும் சிலிண்டர் புக்கிங் செய்யலாம்.
இந்நிலையில், சிலிண்டர் புக்கிங் செய்வதற்காக புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 88888 23456 என்ற எண்ணில் சிலிண்டர் புக்கிங் செய்ய வேண்டும் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment