இன்ஜி., துணை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு துவக்கம்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான துணை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது.தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்காத மாணவர்கள், பொதுப் பிரிவு, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்யும்போதே, அசல் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். இணையதளம் வழியாக சான்றிதழ்களை சரிபார்க்க, தங்களுக்கு விருப்பமான இன்ஜினியரிங் கவுன்சிலிங் உதவி மையத்தை தேர்வு செய்யலாம்.அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் போது குறைகள் கண்டறியப்பட்டால், மாணவர்களின் மொபைல் போன் எண், இ- - மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பி, மாணவர்களை நேரில் வரவழைத்து, சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களை பெற, 0462 -- 2912081 முதல் 85 வரையிலான மற்றும் 044 -- 2235 1014, 2235 1015 என்ற தொலைபேசி எண்களிலும், care@tneaonline.org என்ற, இ- - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.19ல் தர வரிசைதுணை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிப்போருக்கு 19ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியாகிறது. வரும் 20, 21ம் தேதிகளில், 'சாய்ஸ் பில்லிங்' என்ற விரும்பும் கல்லுாரி மற்றும் பிரிவை பதிவு செய்வதற்கான வசதி துவங்கப்படும்.வரும் 22ம் தேதி உத்தேச ஒதுக்கீடும், 23ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment