அரசு ஊழியர்கள்
ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க அரசாணை
தமிழக அரசு வெளியிட்டது
தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் பற்றிய விசாரணையை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும். ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அது குறித்த குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட வேண்டும்.
ஓய்வு பெறும் நாளில் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்படுவதால் அவர்களுக்கான சலுகைகள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தகுதி வாய்ந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் நிலைமையை மதிப்பிட்டு, அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் பணிநீக்கம் அல்லது நீக்கம் செய்யப்படுவதற்கு உத்தரவாதமளிக்கும் அளவுக்கு தீவிரமானவை என்பதையும் முதன்மையான பார்வையில் நிரூபிக்கப்பட வேண்டும் என்று அறிவறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment