மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வினை எழுதினர்.
நீட் தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இரண்டு மாணவர்களுக்கு ஓ.எம்.ஆர். தாள் மாறி வழங்கப்பட்டதாக இரு மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
விசாரணை முடிவில், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் குளறுபடி காரணமாக இரு மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தி அவர்களுக்குமான முடிவுகளைச் சேர்த்தே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மருத்துவ கலந்தாய்வை கால தாமதமாக்கும் என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இரு மாணவர்களுக்க்காக நீட் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்து சரியல்ல என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனால் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment