: அரசு பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வரும், 12ம் தேதி கணினி வழி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் முறையை அதிகரிக்க, அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகம் வழியே, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய, கணினி வழி தேர்வு நடத்த வேண்டும்.
இதற்காக 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திலும், 'மல்டிபிள் சாய்ஸ்' என்ற கொள்குறி வகை வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியே மாணவர்களுக்கு வரும், 12ம் தேதி கணினி வழி தேர்வு நடத்தப்பட வேண்டும்
No comments:
Post a Comment