கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி ரேஷன் கார்டு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, October 25, 2021

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி ரேஷன் கார்டு

ஆவணங்கள் கேட்டு வலியுறுத்தக்கூடாது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி ரேஷன் கார்டு உணவு பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு உத்தரவு 

கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவரின் ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு ரேஷன் அட்டை வழங்கப்படாத நிலையில், அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

 இந்தநிலையில், ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளபோது, சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்மணி புதிய ரேஷன் அட்டை கோரும்போது சட்டப்பூர்வமான நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய ரேஷன் அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment