தினம் ஒரு தகவல் :லிப்ட் பராமரிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 24, 2021

தினம் ஒரு தகவல் :லிப்ட் பராமரிப்பு

லிப்ட் பராமரிப்பு 

அடுக்குமாடி குடியிருப்புகளில் இப்போதெல்லாம் லிப்ட் என்பது அத்தியாவசியமான ஓர் அம்சமாகிவிட்டது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. லிப்ட் இயங்க தொடங்கும்போதே வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அந்த லிப்டை உடனடியாக பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். லிப்ட்களுக்கு தானியங்கி கதவுகள், கைகளால் திறந்து மூடும் கதவுகள், டிரான்ஸ்பரன்ட் என பல வகையிலும் கதவுகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட கதவுகளாக இருந்தாலும் லிப்டின் கதவுகள் சரியாக மூடாவிட்டால் அதைக் கவனிக்க வேண்டியது அவசியம். கதவுகள் சரியாக மூடாத லிப்டில் செல்வது ஆபத்தானது. லிப்டின் உள்ளே எச்சரிக்கை மணி, இண்டர்காம் தொலைபேசி போன்றவை சரியாக வேலை செய்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். 

ஏனென்றால் லிப்ட் பாதியில் நிற்கும்போது இப்படிப்பட்ட சாதனங்களின் துணையோடுதான் நாம் வெளியில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும். மின்தடை ஏற்படும் நேரத்தில் லிப்ட் இயங்காது என்னும் அறிவிப்பை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். லிப்டுகளுக்கு தனி ஜெனரேட்டர் வசதியை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏற்படுத்த வேண்டும். மின்சாரம் நின்றுபோனால் லிப்டின் ஜெனரேட்டர் தானாகவே செயல்படும் வகையில் ஏற்பாடும் இருக்க வேண்டும். 

 லிப்ட் சரியாக இயங்குவதற்கு எந்திரத்தில் எண்ணெயின் அளவு, ஹைட்ராலிக் பம்புகள், கேபிள் இணைப்புகள், பளுவைத் தாங்கும் தாங்கிகள் போன்றவற்றை தகுந்த இடைவெளிகளில் பராமரிக்க வேண்டும். இதுபோன்ற பராமரிப்புகளை லிப்ட்களை குடியிருப்புகளில் அமைத்திருக்கும் நிறுவனங்களின் பொறுப்பிலேயே விட்டுவிடலாம். 

அதேபோல் அவசரத்துக்கு அவர்களின் சேவையை பெறுவதற்கு ஏற்ற வகையில் அந்த நிறுவனத்தின் அவசர அழைப்புக்கான தொலைபேசி எண்களை லிப்டின் உள்ளேயும் வெளியேயும் வைக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் செல்ல வேண்டிய மாடியில் சரியாக லிப்ட் நிற்காமல், தரை மட்டத்தைவிடச் சற்று உயர்வாகவோ குறைவாகவோ நின்றுவிடும். 

அப்போது லிப்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்படலாம். இந்த மாதிரியான சமயங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் அல்லது லிப்ட் பராமரிப்பு நிறுவனத்திலிருந்து தகுந்த ஆட்களின் உதவி கிடைக்கும்வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். 

லிப்டின் அடிப்பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பிரிங் குஷன் ஷாக் அப்சர்வர்களைத் தகுந்த கால இடைவெளிகளில் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மூன்று மாதங்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை லிப்டை முழுமையாக சர்வீஸ் செய்ய வேண்டும். கூடுமானவரை குழந்தைகள் தனியாக லிப்டை இயக்க அனுமதிக்கக்கூடாது.

No comments:

Post a Comment