எம்டிஎஸ் கலந்தாய்வுக்கான பதிவு இன்று தொடக்கம்
தமிழகத்தில், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத்துறை நடத்துகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களை கொண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.
இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான எம்டிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வி தகுதி பெற்ற 1,018 பேர் விண்ணப்பித்தனர். பரிசீலனைக்குப்பின், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 607 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 357 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
எம்டிஎஸ் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்வது இன்று தொடங்குகிறது. முன்னதாக, நேற்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் எம்டிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் வசந்தாமணி ஆகியோர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment