ஓட்டுனர் காலி பணியிடம்
விண்ணப்பிக்க அழைப்பு
சி.எம்.டி.ஏ.,வில் ஓட்டுனர் பணியிடத்திற்கு
'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான
சி.எம்.டி.ஏ.,வில் காலியாக உள்ள ஓட்டுனர்
பணிக்கான, 18 இடங்களுக்கு நேரடி தேர்வு
வாயிலாக பணியாளர்களை தேர்வு செய்ய,
2015ல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. நிர்வாக
குளறுபடி காரணமாக, இந்த அறிவிக்கை ரத்து
செய்யப்பட்டது.
இந்நிலையில், ஓட்டுனர் பணிக்கான, 25 காலி
இடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வு பணி
களை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை சி.எம்.
டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்
ளது. கல்வி, வயது தகுதிகள், இடஒதுக்கீட்டு
சுழற்சி முறை ஆகிய விபரங்கள் வெளியிடப்
பட்டுள்ளன. குறிப்பாக, 'ஆன்லைன்' முறையில்
மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அக்., 27க்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க
வேண்டும் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
.
No comments:
Post a Comment