1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளி 'உலக முட்டை தினம்' ஆக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு இன்று (அக்.8) கொண்டாடுகிறோம்.
கோழிகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியானது நமது நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தியில் 50 சதவிகிதமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு நபருக்கு தினசரி தேவை 0.5 முட்டை என்ற அளவில் பரிந்துரை செய்கிறது. அதாவது ஆண்டுக்கு 180 முட்டை ஒரு நபருக்கு தேவை.
நாடு முழுதும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சராசரி அளவு 79 முட்டைகள் ஆகும். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவானது.
அதிகமான கோழிகள் இந்திய அளவில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12.08 கோடி கோழிகள் உள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒரு நபருக்கு 246 முட்டை கிடைக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு முட்டை மட்டும் தான்.
தினமும் ஒரு முட்டை
திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மைய தலைவர் தாஸ் பிரகாஷ் கூறியதாவது:ஒரு முட்டையில் 72-80 கிலோ கலோரி, புரதம் 6.3 கிராம், கார்போைஹட்ரேட் 0.6 கிராம், மொத்த கொழுப்பு 5 கிராம், நிறைவுறா கொழுப்புகளான மோனோ 2 கிராம், பாலி 0.7 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1.5 கிராம், கொலஸ்ட்ரால் 213 மி.கி., சோடியம் 63 மி.கி., உள்ளது.
மனித உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், ஆக்சிஜனேற்றம் முட்டையில் உள்ளதால் முட்டையை 'வைட்டமின் மாத்திரை' என அழைக்கலாம். முட்டையில் உள்ள கோலின் எனும் வைட்டமின் மனிதனின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. பெண்களின் கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கும் முட்டை கொடுப்பதால் கோலினுடைய தேவை பூர்த்தியாகிறது.
'வைட்டமின் டி' குறைபாடு தற்போது அதிகமானோருக்கு உள்ளது.முட்டையில் இச்சத்து இயற்கையாகவே அதிகம் உள்ளதால் அதனை உட்கொள்ளும் போது 'வைட்டமின் டி' தேவை பூர்த்தியாகிறது. முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அடர்த்தி, ஜீரணிக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் ஆகிய காரணங்களால் தற்போதுள்ள கொரோனா காலத்தில் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம், என்றார்.
No comments:
Post a Comment