சமூக வலைதலங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 17, 2021

சமூக வலைதலங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி?



அறிவை விரிவு செய்யவும், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும், பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவும் என சமூக வலைத்தளங்களின் நன்மைகள் ஏராளம். வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தலைமுறையைச் சேர்ந்தவர்களும், இன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். 

இதில் நிறைய பேர், ஒரு கட்டத்துக்கு மேல் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடோடு பயன்படுத்தாமல், அளவுக்கு அதிகமாக அதில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றைத் தவிர்த்து, சமூக வலைத் தளங் களே கதி எனும் நிலைக்கு மாறி விடுபவர்களும் உண்டு. இதில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம். 'கவன ஈர்ப்பு' என்பதே, பலரையும் சமூக வலைத் தளங்களுக்கு அடிமையாக மாற்றுகிறது. 

எனவே, அவற்றில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? எதற்காக உபயோகப்படுத்துகிறீர்கள்? 

இதனால் உங்களது மற்ற வேலைகள் பாதிக்கப்படாமல் இருக் கிறதா? என்பதை கவனித்துப் பாருங்கள். அதைப் பொறுத்து, முடிவு எடுங்கள். மேலே சொன்னபடி செய்தும், சமூக வலைத்தளங் களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிய வில்லை என நினைத்தால், ஒரு நாளில் நீங்கள் அவசியம் முடிக்க வேண்டிய செயல்களை உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கான செயலியை பதிவிறக்கம்  செய்யுங்கள். 

இந்த செயலி சரியான நேரத்தில் உங்கள் அலுவல்களை குறித்து நினைவுப்படுத்தும். இதன் மூலம் நீங்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் நேரத்தைக் குறைத்து, உங்கள் பணிகளைச் செய்ய முடியும். தற்போது சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கிற் இடம் என்பதைத் தாண்டி, சுயதொழில் செய்யும் நவீன தளமாகவும் மாறி வருகின்றன. 

குறிப் பாக கொரோனா காலத்தில் பெண்களுக்கு ஏற்ற, எளிதான வியாபாரத் தளமாக பல சமூக வலைத்தளங்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. எனவே, நீங்கள் எதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து கிறீர்கள்? எவ்வாறு அதைக் கையாளுகிறீர்கள்? என்பதைக் கவனித்து, அதற்கு ஏற்றாற்போல பயன் படுத்த வேண்டும். உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்தால், அதை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

முன்பே சொன்னது போல, சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, கவன ஈர்ப்பு களமாக மாறும்போதுதான் கொஞ்சம் கொஞ்ச மாக அதற்கு அடிமையாகிறோம். எனவே, வலைத் தளங்களில் உங்களுக்கு வரும் கவன ஈர்ப்புகள் நிஜமாகவே உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறதா? என்பதை உணர்ந்து கவனத்துடன் கையாளுங்கள்.

No comments:

Post a Comment