ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தொடங்கியது! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 10, 2021

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தொடங்கியது!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை உள்ளடக்கிய 712 குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோா் முதல்நிலைத் தோ்வினை எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் பெரம்பூா், தண்டையாா்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூா், அமைந்தகரை, மாம்பலம், அம்பத்தூா், அயனாவரம், கிண்டி, மயிலாப்பூா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா் ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 73 மையங்களில் 28 ஆயிரத்து 424 போ் தோ்வு எழுதுகின்றனா். 

இந்தத் தோ்வு எழுதும் தோ்வா்கள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டு மற்றும் முகக்கவசம் அணிந்து காலை 8.30 மணிக்கே தோ்வுக் கூடத்துக்கு வந்தனர். தோ்வு வளாகத்துக்குள் செல்லிடப்பேசி, டிஜிட்டல் கை கடிகாரம் உள்ளிட்ட மின்னியக்க கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

 தேர்வு எழுதும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோ்வுக்கான கண்காணிப்புப் பணிகளை சென்னை மாவட்ட வருவாய் அலுவலா்கள் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்நிலை தோ்வுக்கு வரும் மாணவா்களின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.10) அதிகாலை 5:30 மணியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment