புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நவ.8 முதல் பள்ளிகளை திறக்கும் அமைச்சரவையின் பரிந்துரைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவையில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக கடந்த செப்.1-ஆம் தேதியிலிருந்து 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் நேற்று வெளியிட்டிருந்தார்.
இதையும் படிக்க- தேவர் குருபூஜை: சசிகலா பசும்பொன் செல்ல அனுமதி
இதன்படி 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் நடைபெறும்.
கிராமப் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நகரப் பகுதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நவ.8 முதல் பள்ளிகளை திறக்கும் அமைச்சரவையின் பரிந்துரைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment