8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, October 28, 2021

8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு '08.11.2021 அன்று தொடங்கவுள்ள எட்டாம் வகுப்புத் தனித் தேர்வை எழுத அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 பதிவிறக்கம் செய்யும் முறை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால் ESLC - NOVEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத்தை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

 உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது''. இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment