பொதுப்பணி, நீர்வளத்துறையில் பணியாற்றும் உதவி பொறியாளர்கள் 809 ேபருக்கு சீனியாரிட்டி பட்டியல் வெளியிட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் உதவி பொறியாளர் 650 பணியிடங்களும், உதவி செயற்பொறியாளர் 492 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த நிலையில் உதவி பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாக 410 உதவி பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 750 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களில் 478 பணியிடங்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு பட்டியலை விரைந்து தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், தற்போது, 1997-98, 1997-1999 , 2006-2007ல் பணியில் சேர்ந்தோருக்கு புதிதாக சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுப்பணித்துறையில் நேரடி நியமனம் அடிப்படையில் கடந்த 1997-1998ல் 165 பேரும், 1997-1999ல் 210 பேரும் பணியில் சேர்ந்தனர்.
இதில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் சீனியாரிட்டி பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1997-98ல் 147 பேருக்கும் மற்றும் துணை தேர்வாக 10 பேரும், 1997-99ல் 206 பேரும், 2006-2007ல் 423 பேரும், துணை தேர்வு முதல் நிலை 15 பேரும், துணை தேர்வு இரண்டாம் நிலை 8 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment