மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவசக் கல்வி திட்டம்: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழில்துறைப் படிப்புகளையும் டிப்ளமோ படிப்புகளையும் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சாக்ஷம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெறலாம்.
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவர்களும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வழங்கும் சாக்ஷம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல டிப்ளமோ மாணவர்களும் உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
ஏற்கெனவே இந்த உதவித்தொகையைப் பெற்று வருபவர்கள், அடுத்த ஆண்டுக்குப் பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் தேர்வான மாணவர்களுக்கு வழங்கப்படும். ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உடையவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்
மாணவரின் வங்கிக் கணக்கு விவரம்
மாணவரின் ஆதார் எண்
பள்ளி/ கல்லூரியின் சான்றிதழ்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 நவம்பர் 2021
கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2012_G.pdf
No comments:
Post a Comment