312 இடங்களுக்கு ஆட்களை தேடுது அண்ணா பல்கலை
அண்ணா பல்கலையில் பேராசிரியர் உள்பட, 312 பணியிடங்களுக்கு, புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அண்ணா பல்கலையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, பேராசிரியர் மற்றும் நுாலக பணி யிடங்கள் காலியாக உள்ளன. கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், காலியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது.இதன்படி, பணி நியமன அறிவிப்பை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
கிண்டி இன்ஜி., கல்லுாரி, கட்டட வடிவமைப்பியல் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில் நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையின் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பேராசிரியர் மற்றும் நுாலகர் பணியில், 67; இணை பேராசிரியர் மற்றும் துணை நுாலகர், உடற்கல்வி பிரிவு துணை இயக்குனர் 106; உதவி பேராசிரியர், நுாலகர் பணியில்,- 1,139 இடங்களுக்கு புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பபதிவு, https:/aurecruitment.annauniv.edu என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது. வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பும்படி, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment