28-ந் தேதி தொடங்குவதாக இருந்த
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு
அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர்களுக்கான தேர்வு, 129 மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இம்மாதம் 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வர்கள் அருகில் உள்ள மையங்களிலேயே தேர்வை எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், தேர்வர்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதுவது குறித்து புதிய அரசாணை வெளியிடப்படும். எனவே தேர்வு குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை ஒத்திவைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்பதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment