பென்சிலால் தவறாக எழுதிவிட்டால், இன்று நாம் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ரப்பர் கண்டுபிடிப்புக்கு பின்னால் பெரிய கதையே இருக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் எரேசர் எனப்படும் ரப்பர், செயற்கை ரப்பரில் இருந்து செய்யப்படுகின்றது.
சரி, ரப்பர் மட்டும் பென்சில் கறையை எப்படி நீக்குகிறது? என ஆராயலாம்.
அதாவது, ரப்பர் காகிதத்தைவிட அதிக ஒட்டும்தன்மை கொண்டது. அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்து தேய்க்கும்போது, காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராபைட் (பென்சில்முனை கிராபைட்டால்தான் செய்யப்படுகிறது), ரப்பரில் ஒட்டிக்கொள்கிறது.
அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து, சுத்தமாகிவிடுகிறது.
இப்போது நாம் பயன்படுத்தும் ரப்பர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் காகிதத்தில் பென்சில் அல்லது மரக்கரியால் எழுதியதை அழிக்க மெழுகு போன்ற ஒரு பொருளை பயன்படுத்தினார்கள். பர்ச்மெண்ட், பாப்பிரஸ் தாள்களில் மை பேனாவால் எழுதியதை மணல் கற்கள், பியூமிஸ் போன்ற மாவுக்கற்களை வைத்து தேய்த்து அழித்துள்ளார்கள். பிரெட் துண்டுகளைகூட ரப்பராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பிரெட் துண்டுகள்தான் அழிக்கும் ரப்பராக ஒரு காலத்தில் இருந்ததால், டோக்கியோவில் இருந்த பள்ளிகளில் மாணவர்கள் எவ்வளவு கேட்டாலும் தருவார்களாம். பசிக்கும்போது அதில் கொஞ்சம் பிரெட்டை மாணவர்கள் சாப்பிட்டு விடுவார்களாம். ரப்பரால் செய்யப்பட்ட எரேசர்ஸ் கண்டுபிடிக்கும்வரை பிரெட்தான் மிகச்சிறந்த எரேசராக இருந்தது.1770-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ப்ரீஸ்ட்லி என்கிற வேதியியல் மற்றும் தத்துவ அறிஞர், தான் எழுதிய 'பேமிலியர் இண்ட்ரொடக்சன் டு தி தியரி அண்ட் பிராக்டிஸ் ஆப் பெர்ஸ்பெக்டிவ்' என்கிற புத்தகத்தில் ரப்பரை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
“பென்சிலால் எழுதியதை அழிக்க உதவும் வகையில் நைர்ன் என்னும் கணித பொருட்கள் வடிவமைப்பாளர் ஒரு சிறிய ரப்பர் துண்டை விற்பனை செய்கிறார். இரண்டு அங்குல அளவுள்ள இது, பல வருடங்கள் உழைக்கும்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
1839-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் குட்இயர் என்பவர், ரப்பரை இலகுவாக்கும் ‘வல்கனைசிங்’ முறையை அறிமுகப்படுத்தினார்.
1858-ம் ஆண்டு பிலடெல்பியாவைச் சேர்ந்த ஹைமன் லிப்மன் என்பவர், பென்சிலின் ஒரு முனையில் ரப்பரைச் சேர்த்து ஒட்டும் முறையை அறிமுகப்படுத்தினார். பிறகு 1860-களில் ‘பேபர் காசெல்’ நிறுவனம், பென்சிலுடன் ரப்பரை பசை மூலம் ஒட்டாமல் பென்சில் முனையில் அவை இணைந்திருப்பது போல தயாரித்தது.
‘பென்னி பென்சில்’ என்று அழைக்கப்பட்ட இந்த மாதிரி பென்சிலை பிறகு பல நிறுவனங்கள் தயாரித்தன. இப்போது பென்சிலும், ரப்பரும் பல வடிவங்களில் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
No comments:
Post a Comment