பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு: மொத்தம் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 9, 2021

பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு: மொத்தம் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு: மொத்தம் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் 20,438 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இரண்டு கட்டக் கலந்தாய்வுகளின் முடிவில், மொத்தம் 31,662 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021- 22ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் கடந்த செப்.14-ம் தேதி வெளியிடப்பட்டது. 

இதில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றனர். இதில், சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடத்தப்பட்டு வருகிறது. துணைக் கலந்தாய்வு அக்.19-ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்.24-ம் தேதியும் நடக்கும். அக்.25-ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. 

 இதற்கிடையே இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு அக்.5-ம் தேதி தொடங்கியது. இதில் சுமார் 31,000 மாணவர்கள் பங்கு பெற்றனர். கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பெயரைப் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் 6-ம் தேதிக்குள் பதிவு செய்தன. அவ்வாறு பதிவு செய்த மாணவர்களுக்கு அக்.7-ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அக்டோபர் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி, கல்லூரியை உறுதி செய்த மாணவர்களுக்கு, இன்று (அக்டோபர் 9ஆம் தேதி) கல்லூரி சேர்க்கைக்கான இறுதி உத்தரவு இணையதளம் மூலம் வழங்கப்பட்டது. 

 இதில் முதல்கட்டக் கலந்தாய்வில் 11,224 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2-வது கட்டக் கலந்தாய்வு முடிவில் 20,438 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 6,000-க்கும் அதிகமான இடங்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 3-ம் கட்டக் கலந்தாய்வு, 4-ம் கட்டக் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment