வேலைவாய்ப்பு அறிவிப்பு: இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் 199 காலியிடங்கள்
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indian Audit and Accounting Department
பணி: Auditor/Accountant
காலியிடங்கள்: 125
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Clerk/ DEO-Grade A
காலியிடங்கள்: 74
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு சாதனைகள் அடிப்படையிலும் மற்றும் கிளார்க் பணிக்கு தட்டச்சு தேர்வு, ஆடிட்டர் பணிக்கு உறுதிப்படுத்தும் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cag.gov.in என்ற அதிகாரப்பூர் வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் ஒரு வெள்ளைத்தாளில் தற்போதைய புகைப்படம் ஒட்டி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2021
மேலும் விவரங்கள் அறிய www.cag.gov.in அல்லது https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06160346c0d13e6-05537746.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment