தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களை மையங்களுக்கு பெற்றோர்கள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். நவம்பர் ஒன்றாம் தேதி நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment