திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 13, 2021

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள்

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள் ஆகும். திருக்குறள் முற்றோதல் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும். 

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதிபெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். திறனாய்வு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும். 

 விதிமுறைகள் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கான விதிமுறைகளாக, 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும். அரசு, உதவிபெறும், தனியார், மத்திய அரசு போன்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். விண்ணப்பிக்கலாம் 

 கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரி, பல்தொழில் நுட்பக்கல்லூரிகள், கல்வி யியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை இதற்கு முன்னர் பெற்றவராக இருக்கக்கூடாது. 

திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். மேற்குறிப்பிட்டவாறு, திருக்குறள் முற்றோதும் திறன் படைத்த மாணவர்கள் wwwtamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்.04142-292039-ல் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment