திட்டமிட்டபடி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 13, 2021

திட்டமிட்டபடி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

முதல்-அமைச்சர் கூறியபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், காலாண்டு, அரையாண்டுக்கு பதிலாக டிசம்பர் மாதத்தில் மாதிரி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ஆலோசனை கூட்டம் கொரோனா தொற்றுக்கு இடையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக வருகிற 1-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 

அதில் பள்ளிகள் திறப்பு, அங்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- 

 பாதுகாப்பு உறுதி செய்யப்படும் நவம்பர் 1-ந்தேதியன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியபடி, பாதுகாப்பு முறைகளை எவ்வாறு பின்பற்றுவது? 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது? அதையே மற்றவர்களுக்கு கடைப்பிடிக்க வலியுறுத்துவது எப்படி? என்பது பற்றி பேசினோம். 

மண்டல வாரியாக கல்வித்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எப்படி நடக்கிறதோ? அதேபோல், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் எந்த புகாரும் இல்லாதபடி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வகுப்புகள் நடத்தப்படும். டிசம்பரில் மாதிரி தேர்வு குழந்தைகளால் முழுநேரமும் முககவசம் அணிய முடியாது என்றால், அவர்கள் ஒருமணி நேரமாவது பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு செல்லலாம். பள்ளிக்கூடம் திறக்க வேண்டும். பள்ளிக்கு குழந்தைகள் வந்து செல்லவேண்டும் என்பதற்காக தான் இப்போது இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். 

கண்டிப்பாக வெற்றி பெறுவோம். குழந்தைகள் உள்பட அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்ற உத்தரவை கல்வித்துறை பின்பற்றும். பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தி உள்ளோம். நவம்பர் 1-ந்தேதி முதல்-அமைச்சர் கூறியபடி பள்ளிகள் திறக்கப்படும். காலாண்டு, அரையாண்டு தேர்வு என்று இல்லாமல், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் டிசம்பரில் ஒரு மாதிரி தேர்வை நடத்த முடிவு செய்து இருக்கிறோம். அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment