வேலுர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! நாள் 04-10-2021 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, October 4, 2021

வேலுர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! நாள் 04-10-2021

வேலுர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந. க. எண்.2734/அ1/2021 நாள் 04-10-2021 

பொருள் : 

பள்ளிக் கல்வித் துறை - உள்ளாட்சி தேர்தல் 2021 - தேர்தல் வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுதல் - 05-10-2021, 08-10-2021 பணி ஒதுக்கீடு ஆணை பெறுவதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் 06-10-2021 மற்றும் 09-10-2021 தேர்தல் நடைபெறும் நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் சார்பு. 

பார்வை : 

வேலுர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைகள் நாள் 04-10-2021 

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. பார்வையில் காணும் வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தேர்தல் வாக்குச் சாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும், 05.10..2021 மற்றும் 08.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணை பெறுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதால் 05-10-21 மற்றும் 08-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. மேலும், தேர்தல் நடைபெறும் நாளான 06-10-2021 அன்றும் 09-10-2021 அன்று அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியினை மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் நடைபெறும் நாட்களான 06-10-21 மற்றும் 09-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. 07-10-2021 அன்று வியாழக்கிழமை பள்ளி வழக்கம் போல் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


(ஒப்பம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் 

பெறுநர் 

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலுர் மாவட்டம் 

நகல் 

1. மாவட்ட ஆட்சித் தலைவர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 

2. ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம் சென்னை 6 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 

3. மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment