01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 8, 2021

01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

முனைவர் க.அறிவொளி தொடக்கக் கல்வி இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை - 6, நே.மு.க.எண் : 007351 / ஜெ2 / 2021, நாள் : 08.10.2021 

அன்பார்ந்த திரு.சிவக்குமார். 

பொருள் : 

தொடக்கக் கல்வி - 1 முதல் 8ஆம் வகுப்பு - 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக, 

பார்வை : 

1. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் அவர்களின் கடித எண். 28024/ டி.எம், 42) / 2021-1, நாள் : 26.08.2021, 

2. அரசாணை (நிலை) எண்.631, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (டி.எம்.M) துறை, நாள் : 05.10.2021. 

01.09.2021 முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட போது, பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (SOP) பார்வை (1)ல் காணும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டது, பார்வை (2)ல் காணும் அரசாணையில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது, வகை எனவே தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

பள்ளித் தூய்மை 

* புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். 

1  பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாதவாறும், மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். - மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியின் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும், 

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் 

ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் முகக் கவசம் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவில் Hand Sanitizer கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை (தெர்மல் ஸ்கேனர் மூலம்) எடுக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும், ஒரு வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி செய்யப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும். மாணவர் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வகுப்பறைகள் குறைவாக இருக்கும் நேர்வில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். 2

No comments:

Post a Comment