எப்பொழுது தேர்ச்சி (promotion) கொடுத்து ஒரு மாணவரை அடுத்த வகுப்பிற்கு அனுப்பவேண்டும்?
கல்வி ஆண்டின் இறுதியில் 5, 8, 10 & 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC கொடுத்த பிறகு தேர்ச்சி (promotion) செய்ய வேண்டும்.
தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளி/உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப் பள்ளிகள் தவறுதலாக தேர்ச்சி வழங்கினால் சரி செய்வது எப்படி?
கீழ் நிலை வகுப்பில் இருந்து உயர் நிலை வகுப்பிற்கு மாணவரை தேர்ச்சி அளிக்கும்போது தேர்வு செய்த வகுப்பு மாணவர்கள் வெவ்வேறு வகுப்பிற்கோ ஒரே வகுப்பிற்கோ மொத்தமாக சென்று குழுமுதல் என்ற பிரச்சனை ஏற்படும் அவ்வாறு எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வட்டார குறுவள மைய BRTE மூலமாக மாவட்ட EMIS ஒருங்கிணைப்பாளரை ( DC)தொடர்பு கொண்டு சரி செய்தல் வேண்டும்.
இறுதி வகுப்பு மாணவர்களை Common pool க்கு Terminal Class Option ஐ தேர்வு செய்து அனுப்பிய பின்பு என்ன செய்ய வேண்டும் ?
மேல் நிலைப்பள்ளி - Move 12 th to common pool தேர்ச்சி 11->12,10-> common pool,9->10 தேர்ச்சி ,8->9 தேர்ச்சி,7->8 தேர்ச்சி,6->7 தேர்ச்சி, 6th New admission_Regular Student
EMIS மூலம் மாணவ/மாணவியர்களுக்கு தேர்ச்சி வழங்கும் போது செய்யக் கூடாத நடவடிக்கை என்ன ?
EMIS மூலமாக மாணவ/மாணவியர்களுக்கு தேர்ச்சி வழங்கும் போது மாணவ/மாணவியர்கள் பயிலும் வகுப்பிலிருந்து அடுத்து அடுத்து வகுப்பிற்க்கு இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிலைக்கு மாற்ற கூடாது.
மேல்நிலைப் பள்ளிகள் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி ( promotion ) வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன?
10 - ஆம் வகுப்பு மாணவர்களை 11- ஆம் வகுப்பிற்கு நேரடியாக தேர்ச்சி promotion வழங்க கூடாது மாறாக Common pool க்கு Transfer செய்து பின் student admission option மூலமாக admit செய்து 11 - ம் வகுப்பில் மாணவ/ மாணவியர் மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் விரும்பும் பிரிவில் admit செய்ய வேண்டும் .
நடுநிலைப்பள்ளிகள் தங்கள் 5- ஆம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 6- ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி ( promotion) வழங்கலாமா?
ஆம், வழங்கலாம்
ஒரு வகுப்பின் அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் (Select) தேர்வு செய்து மறு வகுப்பிற்கு அனுப்ப இயலுமா?
ஆம், தேர்வு செய்த வகுப்புக்கும் தேர்ச்சி வழங்க வேண்டிய வகுப்பிற்கும் இடையில் உள்ள (>> ) குறியை பயன்படுத்தி அனைத்து மாணவர்களளயும் ஒரே நேரத்தில் அடுத்த வகுப்பிற்கு மாற்றலாம்.
தேர்வு செய்த ஒரு வகுப்பு மாணவர்களை ஒரே பிரிவில் இருந்து அடுத்த உயர் வகுப்பின் வெவ்வேறு பிரிவிற்கு மாற்ற இயலுமா?
A பிரிக்கு தெறிவு செய்த மாணவர்களை ஒவ்வொருவராக தேர்வு செய்து ( >) வலப்பக்க அம்புகுறியை பயன்படுத்தி தேர்ச்சி வழங்க வேண்டும்
TC-ல், Medium of Instruction மாறக்காரணம் என்ன?
School Module-ல் , Class & Section Grouping -ல் மாணவரின் வகுப்பை ஒப்பிட்டு சரி பார்க்கவும் .
Special Cash Incentive-ஐ ஒரு மாணவருக்கு common pool க்கு அனுப்பிய பிறகு கொடுக்க இயலுமா ?
இயலாது . மாணவனை common pool-க்கு அனுப்புவதற்கு முன்பே கொடுத்து விட வேண்டும் .
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு TC generate செய்ய முடியுமா?
முடியாது . அவ்வாறு செய்தால் TC இல் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு .
TC தொடர்பான இடர்பாடுகளை எவ்வாறு தவிர்ப்பது ?
வழிகாட்டு நெறிமுறைகளை மிக கவனமாக பின்பற்றினால் TC தொடர்பான இடர்பாடுகளை தவிர்க்கலாம் .
TC generate செய்த பிறகு வரும் பிழைகளை School Login இல் சரி செய்ய இயலுமா?
இயலாது. BRTE யை தொடர்பு கொள்ளவும்.
TC generate செய்து common poolக்கு அனுப்பிய பிறகு student personal information EDIT செய்ய இயலுமா?
இயலாது.
TC generate செய்து common poolக்கு அனுப்பிய பிறகு Student Transfer certificate Details EDIT செய்ய இயலுமா?
இயலும். அதிகபட்சம் 3 முறை School Login இல் edit செய்யலாம்
TC இல் 3 முறை EDIT செய்த பிறகும் Student Transfer certificate Details -ல் பிழை இருந்தால் School Login இல் சரி செய்ய இயலுமா?
School Login இல் சரி செய்ய இயலாது.BRTE -ன் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு சரிசெய்ய இயலும்
TC generate செய்து common poolக்கு அனுப்பிய பிறகு SPECIAL CASH INCENTIVE பதிவு செய்ய இயலுமா? இயலாது.
TC ஐ pdf இல் எவ்வாறு பிழையின்றி எடுப்பது ?
TC generate செய்வதற்கு முன்பு மாணவனின் அனைத்து விவரங்களையும், புகைப்படம் உட்பட மீண்டும் ஒரு முறை Student list and Student TC Details ல் கவனமாக சரி பார்த்த பின்பு TC generate செய்யவும்.
TC details update செய்யும் பொழுது சில இடங்களில் drop down / fields freeze ஆகி உள்ள நிலையில் என்ன செய்வது ?
கவலை வேண்டாம்.
Freeze ஆகவில்லை. படிப்படியாக விவரங்களை பூர்த்தி செய்தால் எவ்வித இடர்பாடுகளும் இன்றி TC details update செய்யலாம்.
Student list-ல் உள்ள மாணவன் பள்ளியை விட்டு செல்லும் போது அவனை எப்படி வெளியே அனுப்புவது ?
Current student list-ல் உள்ள Student TC details-ல் மாணவனின் அனைத்து விவரங்களையும் சரி பார்த்து update TC details செய்த பிறகு அருகில் உள்ள green arrow மார்க்-ஐ click செய்தால் 6 reasons list down ஆகும். 1. Long absent 2. Transfer Request by Parents 3. Terminal Class 4. Dropped Out 5. Student Expired 6. Duplicate EMIS Entry. இவற்றில் சரியானதை தெரிவு செய்தால் common pool-க்கு அனுப்பிவிடலாம்.
READ THIS ALSO EMIS ஆசிரியர் வருகையை சிரமமின்றி பதிவு செய்வது எப்படி?
மாணவரை promote செய்த பிறகு TC generate செய்யலாமா?
கல்வியாண்டின் இறுதியில் TC generate செய்தால் 'Student is Promoted to the Next class - YES' எனவும், கல்வியாண்டின் இடையில் TC generate செய்தால் 'Student is Promoted to the Next class - NO DISCONTINUED' எனவும் குறிப்பிட்டு TC generate செய்யலாம்
Past student list-ல் உள்ள மாணவர்களை Current student listக்கு கொண்டு வர இயலுமா ?
இயலாது.
TC Print செய்யும் போது Table cut ஆகிறது. சரி செய்வது எப்படி?
சரி செய்யப்பட்டது.மேலும், Print செய்வதற்கு முன் Print Settings இல் margin-ஐ adjust செய்து Print Preview இல் சரியாக உள்ளதா என்று உறுதி செய்த பின் print கொடுக்கவும்.
மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களை 11-ம் வகுப்பிற்கு நேரடியாக promote செய்யலாமா?
தவறு. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களை TC generate செய்து common pool-க்கு அனுப்பிய பின்னர், 11-ம் வகுப்பிற்கு common pool-லிருந்து admit செய்ய வேண்டும்.
ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த மாணவனை அதே மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு தொடர விரும்பினால், 11-ம் வகுப்பிற்கு நேரடியாக promote செய்யலாமா?
தவறு. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களை TC generate செய்து common pool-க்கு அனுப்பிய பின்னர், 11-ம் வகுப்பிற்கு common pool-லிருந்து admit செய்ய வேண்டும்.
TC-ஐ download செய்ய இயலவில்லை.
Tc generate செய்த common pool-க்கு அனுப்பிய பின்னர், Past student list -ல் preview icon-ஐ click செய்து print settings-ல் save as pdf கொடுத்து download செய்து கொள்ளலாம்.
LKG மாணவர்களுக்கு (2018 ல் பிறந்தவர்கள்) பிறந்த தேதி save செய்ய இயலவில்லை.
சரி செய்யப்பட்டுவிட்டது.
Aadhar Number Mandatory என வருகிறது.
இல்லை. Aadhar Number Mandatory முன்னரே நீக்கப்பட்டுவிட்டது.
Aadhar Number 0 (zero) என்று கொடுத்துவிட்டு, முழு விவரம் பதிவு செய்தாலும் save ஆகவில்லை.
இல்லை. '0' என்று ஒரு முறை கொடுத்தபின், Invalid Aadhar என்று Popup message தோன்றும். அதை நிராகரித்து விட்டு, SUBMIT செய்தால் போதுமானது.
ADMISSION FORM பூர்த்தி செய்யும்பொழுது,சில இடங்களில் drop-down option freeze ஆகி உள்ளது.
இல்லை. படிப்படியாக விவரங்களைப் பதிவு செய்தால் இந்த இடர்பாட்டினைத் தவிர்க்கலாம்.
சில CASTE drop-down list-ல் வரவில்லை.
Gazette list உடன் ஒப்பிட்டுஅனைத்தும் drop down-ல் இணைக்கப்பட்டுள்ளது.
LKG ADMISSION (In case of Tamil Nadu), Other Class Admission ( In case of other states) ADMISSION FORM பூர்த்தி செய்து SUBMIT செய்த பின் SUBMITTED SUCCESSFULLY என்று தோன்றியது. ஆனால் STUDENT LIST ல் குறிப்பிட்ட மாணவரைக் காணவில்லை.
வருந்த வேண்டாம். EMIS DISTRICT COORDINATOR APPROVE கொடுத்தபின், மாணவர் பெயர் தங்கள் பள்ளியின் STUDENT LIST-ல் வந்துவிடும்.
ADMISSION FORM ல் REGULAR STUDENT, MIGRANT STUDENT எதனைக் குறிக்கிறது?
Regular student - தமிழ் நாட்டில் / வேறு மாநிலங்களில் / வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளில் பயின்று இப்பள்ளிக்கு புதிதாக சேரும் மாணவர்கள்.
Migrant student - புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தை என்பார் பெற்றோர்களின் தொழில் நிமித்தமாக பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது பெற்றோருடன் சேர்ந்து வரும் குழந்தைகள் ஆவார்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் தமிழ்நாட்டில் கல்வி பயின்று விட்டு மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள். அம்மாணவர்களுக்கு மட்டுமே இவ்வகையின் கீழ் EMIS பதிவினை உருவாக்குதல் வேண்டும்.
New Admission அனைத்து மாணவர்களும் செய்ய வேண்டுமா?
இல்லை.
மாணவர் EMIS ID ஏற்கனவே இருந்தால் போடத்தேவையில்லை. SEARCH செய்து ADMIT செய்து கொள்ளலாம்.
TAMIL FONTS LIKE க்ஷ, ஶ்ரீ, ஸ்ரீ பதிவு செய்தால் பிரதிபலிக்கவில்லை.
EMIS AUTOMATIC KEYBOARD, TAMIL 99 (INDIA) KEYBOARD, TAMIL 99 (SRILANKA) KEYBOARD பயன்படுத்தவும்.
LKG தவிர பிற வகுப்புகளுக்கு EMIS ID create செய்ய இயலவில்லை.
இயலும். பிற மாநில மாணவர்களுக்கும் தேவை எனில் EMIS ID create செய்ய இயலும். DISTRICT COORDINATOR APPROVE கொடுத்தபின், தங்கள் பள்ளியின் STUDENT LISTல் மாணவர் பெயர் வந்துவிடும்.
மாணவரின் பெயரை எமிஸ் தளத்தில் பூர்த்தி செய்யும் பொழுது "Invalid Student Name in Tamil" என வருகிறது?
மாணவரது பெயரை நிரப்பும்போது மாணவரது பெயருக்கும், தலைப்பு எழுத்துக்கும் (initial-க்கும்) இடையில் இடைவெளி மட்டுமே விட வேண்டும். புள்ளியை (.) உபயோகித்தல் கூடாது.
மாணவர்களின் எண்ணிக்கை விவரப்பட்டியலை (Students Summary தவிர்த்து) எளிதில் அறிவதெப்படி?
Dashboard-ல் Total Students அருகில் உள்ள படத்தை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
Staff List-ல் Staff Profile மட்டுமே உள்ளது. Teaching மற்றும் Non-Teaching பணியாளர்களின் Gender-wise எண்ணிக்கையை எவ்வாறு அறியலாம் ?
Dashboard-ல் Total Staff அருகில் உள்ள படத்தை Click செய்தும் அறிந்து கொள்ளலாம்.
New Admission Icon ஐ click செய்தால் எந்த விவரமும் தோன்றவில்லை.ஏன்?
New Admission முழுவிவரமும், Transfer மற்றும் Fresh எண்ணிக்கையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அதற்குரிய எண்ணிக்கையினை Click செய்து மாணவர் விவரம் அறியவும்.
Dashboard-ல் FRESH count எதனைக் குறிக்கிறது?
புதியதாக Emis ID Create செய்யப்பட்ட மாணவரைக் குறிக்கிறது.
வேறு பள்ளியில் பயின்ற மாணவரை Common Pool ல் இருந்து எங்கள் பள்ளிக்கு Admit செய்தோம்.புதியதாக சேர்க்கப்பட்ட அம்மாணவனின் விவரம் Fresh எண்ணிக்கையில் இடம்பெறாமல் Transfer எண்ணிக்கையில் இடம்பெறுவது ஏன்?
புதியதாக Emis ID Create செய்யப்பட்ட மாணவர் பெயர் Fresh எண்ணிக்கையில் இடம்பெறும்.
தாங்கள் குறிப்பிட்ட மாணவர், ஏற்கனவே EMIS ID உடன் உங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளதால் Transfer எண்ணிக்கையில் மட்டுமே இடம்பெறுவார்.
Dropout மாணவர் Archieve லிருந்து Move to common pool கொடுத்து Admit செய்துள்ளோம். இம்மாணவரின் எண்ணிக்கை Transfer count ல் சேர்த்துக் கொள்ளப்படுமா?
இல்லை. Fresh Count ல் சேர்த்துக் கொள்ளப்படும்.
Dashboard ல் invalid Aadhaar number மற்றும் Invalid Phone number ல் உள்ள எண்ணிக்கை எதனைக் குறிக்கிறது?
தவறான Aadhaar number மற்றும் Phone numbe rபதிவேற்றம் செய்த மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
Dashboard ல் Invalid Aadhar / Invalid Phone Number ல் ZERO எண்ணிக்கை வர என்ன செய்ய வேண்டும்?
Student→ Student List→ Select Action Button for particular student → give Correct Aadhar / Phone number→ UPDATE. UPDATE செய்தபின் Popup (Successfully updated) தோன்றும். பிறகு Dashboard ல் update ஆகும்.
EMIS SCHOOL LOGIN-ல் புதியதாக ஒரு Class and Section-ஐ சேர்ப்பது எப்படி?
School login→ Schools → Class & Section Grouping → Class and Section → +Add click செய்து Standard, Section, Group, Medium of Instruction, Class Teacher விவரங்களை உள்ளீடு செய்து save செய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கையின் பொழுது ENGLISH MEDIUM DROP DOWN LIST-ல் வரவில்லை. ஏன்?
பள்ளியில் English Medium ஆரம்பிக்க, உரிய அலுவலரின் அனுமதி பெற்றபின் தங்கள் பள்ளி ஆசிரியர் பயிற்றுநரிடம் (BRTE) தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC) English medium-ஐ add செய்தபின் ENGLISH MEDIUM drop down list-ல் இடம்பெறும்.
புதியதாக UPGRADE ஆன பள்ளியில் உயர் வகுப்புகளை Class and Section-ல் சேர்ப்பது எப்படி?
தரம் உயர்த்தப்பட்ட விவரத்தை ஆசிரியர் பயிற்றுநர் மூலமாக மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் (DC) தெரிவித்தால், உரிய மாற்றங்களைச் செய்வார். அதன்பின் School login→ Schools → Class & Section Grouping → Class and Section → +Add click செய்தால் அனுமதிக்கப்பட்ட வகுப்புகள் drop down list-ல் இடம்பெறும்.
Student TC Details-ல் CLASS & MEDIUM தவறாக உள்ள மாணவரின் விவரத்தினை சரி செய்வதெப்படி?
TC generate செய்வதற்கு முன்னதாக மட்டுமே மாணவர் விவரத்தை திருத்த இயலும். CURRENT STUDENT LIST-ல் உள்ள ஒரு மாணவரின் விவரத்தை திருத்த STUDENTS→ STUDENT LIST→CLASS and SECTION-ஐ UPDATE செய்யவும்.
TC வழங்கப்படவுள்ள மேல்நிலை வகுப்பு (XI / XII) மாணவரின் TC details-ல் GROUP இல்லை / தவறாக உள்ளது.
TC generate செய்வதற்கு முன்பே ஒரு மாணவரின் CORRECT GROUP-ஐ STUDENT PROFILE-ல் UPDATE செய்யவும். அவ்வாறு செய்தால் மாணவரின் TC details-ல் CORRECT GROUP தோன்றும்.
TC வழங்கப்பட்ட மேல்நிலை வகுப்பு (XI / XII) மாணவரின் TC-ல் GROUP விவரங்கள் இல்லை (அல்லது) தவறாக உள்ளது.
ஆசிரியர் பயிற்றுநரிடம் (BRTE) தெரிவித்து உரிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
CBSE/ICSE பள்ளியில் உயர்நிலை வகுப்பு (XI and XII) மாணவர் GROUP, பாடவாரியாக தெரிவு செய்ய இயலுமா?
இயலாது.
No comments:
Post a Comment