புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான 12 பேர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அமைத்தது. புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் புதிய பாடத்திட்ட குழு தலைவராக இருப்பார்.
16 ஆண்டுகளுக்கு பின் உருவாக்கப்படும் புதிய பாடத்திட்டம், புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கும்.
READ THIS ALSO கல்வி தொலைக்காட்சியில் இன்று 22.09.2021
இதை உருவாக்கும் குழுவில் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக நிறுவன வேந்தர் மகேஷ் சந்திர பந்த், தேசிய புத்தக டிரஸ்ட் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருப்பார்கள்.
பள்ளிக்கல்வி, தொடக்க குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர் கல்வி, வயதுவந்தோர் கல்விக்கான 4 புதிய தேசிய பாடத்திட்டங்களை இந்த குழு உருவாக்கும்.
READ THIS ALSO ஆசிரியர்களுக்கான5-ம்கட்ட கணினி பயிற்சி
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டோரிடம் இருந்து கருத்துகளை பெற்று புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். புதிய பாடத்திட்ட குழுவின் காலம் 3 ஆண்டுகளாக இருக்கும் என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment