தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,
சென்னை-6
ந.க.எண்.41779/24/11/2021 நாள்.19.09.2021
பொருள்:
பள்ளிக்கல்வி- ஆசிரியர் பயிற்றுநர்கள் பொது மாறுதல் 2021-2022 -
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில மற்றும் மாவட்டத்திட்ட
அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில்
பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல்
கலந்தாய்வு 20.09.2021அன்று நடத்திட திட்டமிடப்பட்டமை - தள்ளி
வைப்பு - தகவல் தெரிவித்தல் - சார்பாக.
பார்வை:
1. அரசாணை(1டி) எண்:134 பள்ளிக்கல்வித் (பக5(1) துறை,
நாள் 18.08.2021.
2. சென்னை-6, பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்
தொகுதி) செயல்முறைகள். ந.க.எண்.41779/C4/இ1/2021
நாள்.13.09.2021,14.09.2021,15.09.2021 மற்றும் 18.09.2021
பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்
கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும்
தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பணிமாறுதல்/
பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வை(1)ல் கண்டுள்ளபடி நெறிமுறைகள்
வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்
கட்டமாக
500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு உயர்நிலை /
மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப்
பணிமாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக
அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பொது மாறுதல்
கலந்தாய்வினை 20.9.2021 அன்று நடத்திடத் திட்டமிட்டு பார்வை-2ல் காணும்
செயல்முறைகள் வாயிலாக அறிவுரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் நிருவாகக் காரணங்களின் அடிப்படையில் 20.9.2021 அன்று
நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி
வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment