இந்தியாவில் படைப்பாற்றல் திட்டத்தை வழங்கும் இன்ஸ்டாகிராம்
பயனர்களுக்கு படைப்பாற்றல் தொடர்பான கல்வித் திட்டத்தை வழங்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் தளத்தை உலகின் பல்வேறு நாட்டு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். புதுப்புது விடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்ட காணொளிகளை பதிவேற்ற பயனர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் படைப்பாற்றல் தொடர்பான கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக இன்ஸ்டாகிராம் வியாழக்கிழமை அறிவித்தது.
அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக வழங்க உள்ள இந்த திட்டமானது பயனர்கள் கற்க, வருமானம் ஈட்ட மற்றும் தங்களது பிந்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணத்துவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ள இந்தப் பயிற்சியைப் பெற ’www.bornoninstagram.com’ என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment