தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முழுமையாக குறள் ஒப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.
மாணவர்களின் மனதில் அறநெறிக் கருத்துகளை பதிய வைக்கும் நோக்கத்துடன், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, பரிசுத் தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
v
இந்த வகையில், ஆண்டுக்கு 70 பேருக்கு மட்டுமே பரிசு வழங்கப்படுகிறது.
இதனால், பல மாணவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் வகையில், அனைத்து குறட்பாக்களையும் ஒப்பிக்கும், அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், பரிசுத் தொகையை, 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment