முதுநிலை மருத்துவப் படிப்பு வரைவு
வழிகாட்டுதலில் உரிய மாற்றம்: என்எம்சி ஒப்புதல்
முதுநிலை மருத்துவப் படிப்பு வரைவு வழிகாட்டு
தல் 2021-இல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய தேசிய மருத்துவ
ஆணையம் (என்எம்சி) ஒப்புக்கொண்டுள்ளது.
ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கும், இந்திய மருத்துவ சங்க
(ஐஎம்ஏ) நிர்வாகிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற
ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது தெரியவந்
துள்ளது.
முதுநிலை மருத்துவப்படிப்புகளிலும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்
புகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் சர்ச்சை எழுந்த நிலை
யில், இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான புதியவரைவு அறிக்
கையை தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்டது.
அதில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும்
அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் மத்
திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்தும்.
கல்வி உதவித் தொகை ரத்து
என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அறிவிக்கப்பட்டன.
இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது
போல மருத்துவர்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த
னர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்
களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அர
சுகளிடமிருந்து பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கடும்
கண்டனத்துக்கு உரியதாகும் என்று தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிக
ளுடன் தேசிய மருத்துவ ஆணைய மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை
ஆலோசனை நடத்தினர்.
No comments:
Post a Comment