மூன்றாண்டு சட்டப் படிப்பு விண்ணப்ப பதிவுக்கு, அக்., 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மேலும், ஐந்தாண்டு படிப்புக்கு கவுன்சிலிங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட பல்கலை பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், அக்., 6ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 ஆண்டு 'கட் ஆப்'
சட்டக் கல்லுாரிகளில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புக்கான 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் 4ம் தேதி வரை, 'ஆன்லைன்' வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆன்லைன் வழியில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
9ம் தேதி மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.அதை பெறும் மாணவர்கள், 11 முதல் 13ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என, சட்ட பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment