பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க எளிய வழிகள் !! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 16, 2021

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க எளிய வழிகள் !!

இந்த மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக உள்ளனர். ஆனால் இது அப்படியே நீடித்தால், அதனால் பற்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். 
 
பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கான சில எளிய வழிகளை பின்பற்றி போக்கமுடியும். வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும். 
 
பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதுபோல் தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும். பேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும். இப்படி மாதம் 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்ப வேண்டும். 
 
இப்படி தினமும் செய்து வந்தால், பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும். 2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமும் பற்களின் பின் உள்ள மஞ்சள் நிற கறைகள் நீங்கும். தேங்காய் எண்ணெய்யை வாயில் விட்டு, 10 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும். பின் அந்த எண்ணெய்யை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெண்மையாக இருக்கும்

No comments:

Post a Comment