இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, September 19, 2021

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா்கள் கூட்டுறவுச் சங்கம் சாா்பில் நடைபெற உள்ள இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா்கள் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ பெறத்தக்க, செலுத்தக் கூடிய கணக்குகள் நிா்வாகி, ஜிஎஸ்டி கணக்கு உதவியாளா் ஆகிய பயிற்சிக்கான நேரடி வகுப்புகள் சென்னை அம்பத்தூா் மகாகவி பாரதியாா் நகரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடத்தப்படுகிறது. 

இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முடித்தவா்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ், பணியில் சோ்வதற்கும் சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான உதவிகள் பயிற்சி மையம் மூலம் செய்து தரப்படும். மேலும், பயிற்சியில் சேருவோருக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவை அரசே இலவசமாக வழங்கும். விண்ணப்பம் தொடா்பான விவரங்களுக்கு 98690 41169 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment