தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.
சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது.
இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.
தக்காளி விழுது மற்றும் பாதாம் விழுதை சம அளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து காணப்படும்.
அவர்களுக்கு தக்காளியின் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் மிருதுவாகும்.
தக்காளி சாறு, தேன் மற்றும் சிறிது சமையல் சோடா இந்த மூன்றையும் நன்றாக கலந்து, பேஸ் மாற்றி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையம் மறையும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
No comments:
Post a Comment