அரசுத் துறைகளில் தொடக்க நிலை பணியாளர் நியமனத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்றுதனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த 2020 மே 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்டு, அக்டோபர் 24-ம் தேதி திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண்382-ல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழக அரசுத் துறைகளில் தொடக்க நிலை பணியாளர்களை நியமிக்க முடியவில்லை.
தற்போது கரோனா நிலைமைசீரடைந்து, பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றைய சூழலுக்கு அந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. எனவே, கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment