தொப்பை குறைய பாட்டி வைத்தியம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, September 18, 2021

தொப்பை குறைய பாட்டி வைத்தியம்

தொப்பை குறைய பாட்டி வைத்தியம் 

இந்த கட்டுரையில் “தொப்பை குறைய இயற்கை வைத்தியம்” சிலவற்றை பார்க்கலாம். சோம்பு தண்ணீர், பப்பாளி காய், வெங்காயம், பூண்டு, அருகம்புல், சுரைக்காய், கொள்ளு போன்றவற்றை பயன்படுத்தி தொப்பை குறைய பாட்டி வைத்தியம் சோம்பு தண்ணீர் தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம். சுரைக்காய் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள். பப்பாளி காய் பப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும். எலுமிச்சை சாறு தினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும். வெங்காயம், பூண்டு கட்டாயம் சமையலில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும். 

 அருகம்புல் ஜூஸ் 

 அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.. உடல் எடைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு முறை மந்தாரை வேர் மந்தாரை வேரை 1 கப் நீரில் போட்டு காய்ச்சி, நீர் பாதியாக குறைந்ததும், வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை பாதியாக குறையும். வாழைத்தண்டு ஜூஸ் வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும். நடைப்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும். கொள்ளு தேனீர் கொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம். கல்யாண முருங்கை கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும். தொப்பை குறைய இயற்கை வைத்தியம் என்ற இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்டவாறு செய்து பாதுகாப்பாக உங்கள் தொப்பையை விரைவாக குறையுங்கள்.

No comments:

Post a Comment