அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு!!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 16, 2021

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

சுருக்கம் 
 
பொதுப் பணிகள் - 20212022-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்துதல் ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. 
 
மனிதவள மேலாண்மைத் எஸ்துறை அரசாணை (நிலை) எண்.91 நாள்: 13.09.2021 பிலவ, ஆவணி-28, திருவள்ளுவர்ஆண்டு,2052 
 
படிக்க: 
 
1. அரசாணை (நிலை) எண்.12, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (பணி எஸ்) துறை, நாள் 27.02.1989. 
 
2 அரசாணை (நிலை) எண்.98, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 17.07.2006. 
 
3. அரசாணை (நிலை) எண்.93, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 17.072018. 
 
ஆனை 
 
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், 13.092021 அன்று நடைபெற்ற 2021-2022-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
 
2 மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க, பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன:- 
 
1) அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள ஆண்டுகளிலிருந்து 32ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. 30 (த.பியா) .2 
 
li) தொடர்புடைய பணி விதிகளில், மேற்குறிப்பிட்ட அளவிற்கும் குறைவான வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு அளவு பொருந்தும். 
 
iii) மேற்குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில், தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது. 
 
iv) பட்டியலினத்தவர், பட்டியலின அருந்ததியர், பழங்குடியினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வ), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினர்களிலும் (All Castes) உள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும். கருணை அடிப்படையிலான நியமனங்களை பொறுத்த வரையில், தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பானது மாற்றம் ஏதுமின்றி தொடரும், 
 
vi) தற்போது உயர்த்தப்படும் வயது உச்ச வரம்பானது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகள் (Recruiting Agencies) மற்றும் நியமன அலுவலர்களால் (Appointing Authorities), இவ்வரசாணை வெளியிடப்படும் நாள் முதலாக அறிவிக்கை (Notification) செய்யப்படும் பணியாளர் தெரிவுகள் அனைத்திற்கும் (Recruitment) பொருந்தும். vii) இவ்வாணைகளின் அடிப்படையில், தொடர்புடைய பணி விதிகளில் (Special | Adhoc Rules) உரிய திருத்தங்களை 
 
3 உடனடியாக மேற்கொள்ளுமாறு தானைமர் செயலக அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 
 
(ஆளுநரின் ஆணைப்படி) வெ. இறையன்பு  தலைமைச் செயலாளர். 
 


பெறுநர் 
 
அனைத்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அரசு முதன்மைச் செயலாளர்கள் அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகம், சென்னை - 600009, அனைத்து தலைமைச் செயலகத் துறைகள், சென்னை 600009, செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை 600009. அனைத்து துறைத் தலைவர்கள், (தலைமைச் செயலகத் துறைவழியாக) அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள். பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மதுரை கிளை, செயலாளர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சென்னை 600003, தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், கல்லூரி சாலை, சென்னை 600006, தலைவர், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம், சென்னை-600018, தலைவர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை 600002 இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, சென்னை-600032 உறுப்பினர் செயலர், தமிழ்நாடுவன சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமம், சென்னை-600015. நிதித் (பொ-நிமாக) துறை, சென்னை 600009. நதல் முதலமைச்சரின் செயலாளர் III, முதலமைச்சர் அலுவலகம், சென்னை 600009. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை-600009. தலைமைச் செயலாளரின் முதன்மை தனிச்செயலர், சென்னை 600 009. மனிதவள மேலாண்மைத் துறை செயலாளரின் முதன்மை தனிச்செயலர், சென்னை-600009. மனிதவள மேலாண்மைத் (நி.8.2) துறை, சென்னை 600 009. (தமிழ்நாடு அரசு இணையதளத்தில் வெளியிடுதல் குறித்து) இருப்புக் கோப்பு உதிரிநகல். // ஆணைப்படி அனுப்பப்படுகிறது // பாரம் பிரிவு அலுவலர், 24 h4

No comments:

Post a Comment