தலைமுடி உதிர்கிறதே என்ற கவலை இனி வேண்டாம்...!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 16, 2021

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலை இனி வேண்டாம்...!!

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலை இனி வேண்டாம்...!! 
 
தலைமுடி வேர் பகுதிக்கு தினமும் சத்துக்கள் நிறைந்த எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வரும் போது, வேர் பகுதி பலம் பெற்று, முடி உதிர்வு நின்று, நல்ல நீண்ட கூந்தல் வளரும். அனைவருக்கும் ஒரே மாதிரியான தலைமுடி இருப்பதில்லை. சிலருக்கு வறண்ட முடி, சிலருக்கு சுருள் முடி, சிலருக்கு போஷாக்கு இழந்து சோர்வாக காணப்படும் முடி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும். ஆகையால், அனைவரும் ஒரே மாதிரியான சிகிச்சையை பெறுவது பலனளிக்காது. உங்கள் முடியின் வகையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சையை செய்ய வேண்டும். 
 
 தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்போர் நிச்சயம் இந்த முட்டை ஹேர்பேக்கினை பயன்படுத்தவும், முட்டையில் அதிக அளவில் புரதமானது உள்ளது. இந்த முட்டையில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: முட்டை 1, பால் கால் கப், விளக்கெண்ணெய் 3 ஸ்பூன். செய்முறை: முட்டையினை உடைத்து பாலுடன் சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு மீண்டும் மிக்சியில் போட்டு அடிக்கவும்.
 
 இதேபோல் 3 முறை செய்தால் முட்டை ஹேர்பேக் ரெடி. இந்த முட்டை ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து, 30 நிமிடங்கள் கைகளால் வேர் நுனி, வேர்க் கால்கள் என அப்ளை செய்து அலசினால் தலைமுடி உறுதியாகும். முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும். தலைக்கு குளிக்கும் போது எப்போதும் சுடு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. இது தலைமுடி மற்றும் வேர் பகுதியை பலவீனமாக்கி விடும். இதனால் தலைமுடி உதிர்வு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment