திருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்டத் திட்ட அலுவலர் மற்றும்
முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை :
திரு. ர. பாலமுரளி, எம்.ஏ., பி.எட்.,
ந.க.எண் : 06/Quality/ஒபக/2021. நாள்: 11.09.2021.
பொருள் :
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 1 முதல் 12ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்களுக்கு Assignment / Assessment
வழங்குதல் - சார்பு...
ஒவ்வொரு ஆசிரியரும் Notes of Lesson கண்டிப்பாக திங்கட்கிழமை தலைமை ஆசிரியர்
பார்வைக்கு வைக்க வேண்டும். Notes of Lesson-ல் அந்த வாரம் நடத்தக்கூடிய Refresher course
அல்லது Prioritized syllabus அடிப்படையிலான Content எழுதி, மாணவர்களுக்கு வழங்க
திட்டமிடப்பட்டுள்ள Assessment எந்த பகுதியில் இருந்து எத்தனை மதிப்பெண்களுக்கு
வழங்கப்படவுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.
9 முதல் 12ஆம் வகுப்பு
வாரம் முதல் நாளில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள Assessment
எந்தப் பாடப்பகுதி என்பதை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வார இறுதியில்
அந்த வாரம் நடத்தப்பட்ட பாடப்பகுதியில் 20 அல்லது 30 மதிப்பெண்களுக்கு Assessment நடத்தப்பட்டு
விடைத்தாட்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் பதிவேட்டுடன் தலைமை ஆசிரியரின் பார்வைக்கு
முன்னிலைப்படுத்த வேண்டும்
மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் தனிக் கவனம் செலுத்தியோ அல்லது
அதே வகுப்பு மாணவர்கள் (Peer Group) மூலமாகவோ அல்லது பெற்றோர் மூலமாக ஊக்கப்படுத்தியோ
(Motivate) தேவையெனில் வலுவூட்டம் (Reinforcement) செய்து மீள Assessment கொடுக்க
வேண்டும்.
Assessment-இல் கலந்து கொள்ளாத மாணவர்களுக்குப் பெற்றோரை தொடர்புகொள்வது சார்ந்து
எவ்வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தலைமை ஆசிரியருக்கு அறிக்கையாக தரப்பட
வேண்டும். மேலும், மாணவர்களை வரவழைத்து அவர்களுக்கு அடிப்படை கருத்துக்களை Peer Group
மூலமாக பயிற்சி கொடுத்து Assessment நடத்தப்பட வேண்டும்
No comments:
Post a Comment