மாணவர்களுக்கு வங்கி கணக்கு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, September 11, 2021

மாணவர்களுக்கு வங்கி கணக்கு

பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. 
 
ஆதி திராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவை சார்பில், அந்தந்த பிரிவு மாணவர்களுக்கு, உதவி தொகை வழங்கப் படுகிறது. இது தவிர, என்.எம்.எஸ்.எஸ்., என்ற வரு வாய் வழி திறன் தேர்வு, 'டிரஸ்ட்' தேர்வு மற்றும் தேசிய திறனாய்வு தேர்வு போன்றவற் றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் உதவி தொகை தரப்படுகிறது. இதை நேரடியாக வழங்கும் வகையில், மாண வர்களின் பெயரில் வங்கி கணக்குகள் துவங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
குறைந்தபட்ச இருப்பு தொகை நிபந்தனை இல்லாமல், இந்த வங்கி கணக்குகளை துவங்க வேண்டும் என்றும், தேசிய வங்கிகளில் மட்டுமே கணக்கு துவங்க வேண்டும் என்றும், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

No comments:

Post a Comment