தேசிய சிலம்பம்: திருச்செந்தூா் மாணவிக்கு தங்கம்
தேசிய அளவில் குழந்தைகளுக்கான சிலம்பாட்ட போட்டி கோவாவில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.முத்து இசைராதா 17 வயதுக்குள்பட்ட 70 கிலோ எடைப்பிரிவில் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்று, தங்கப்பதக்கத்தை வென்றாா். இதன் மூலம் மாணவி முத்து இசைராதா, உலகளவில் பூட்டானில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
No comments:
Post a Comment