செய்தி வெளியீடு எண்.
நாள்
.09.2021
செய்தி வெளியீடு
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த,
திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு
ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிப்பு -
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த,
நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை
6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட
அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக
குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று
கண்டறியப்படுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு
நடவடிக்கைகளாலும், நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாகவும்,
நோய்த் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது.
இருப்பினும் ஒரு சில
மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது.
மேலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் நிஃபா
வைரஸ் நோயின்
தாக்கம்
கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் ஏற்படாதவாறு, மாநில
எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் அதிகரித்து
காணப்படுகிறது.
இதனால் அம்மாநிலத்துடனான
போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment