வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண் 2734/11/2021, நாள் 28.09.2021
பொருள்:
பள்ளிக்கல்வித் துறை - உள்ளாட்சி தேர்தல் 2021 - தேர்தல்
வாக்குச்சாவடி பணிக்காக ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியரல்லாதோர் - பணியாளர்களக்கு பயிற்சி
வகுப்புகள் நடைபெறுதல் - பயிற்சி வகுப்பு நடைபெறும்
நாட்களில் பள்ளிளுக்கு விடுமுறை - அறிவித்தல் மற்றும்
பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் - சார்பு
பார்வை :
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்
ஆணைக்கிணங்க
வேலூர் மாவட்டத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற
06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் முதல் மற்றும் இரண்டு
கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஆயத்தமாக 29.09.2021
அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரண்டாம் பயிற்சி வகுப்பில் கலந்துக்
கொள்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால் மாவட்ட ஆட்சியரின்
ஆணைக்கிணங்க தேர்தல் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஏதுவாக 29.09.2021
அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பணிக்கு ஆணை பெற்றுள்ள அனைத்து பணியாளர்களும்
குறித்த நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்திற்கு சென்று
பயிற்சியில் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.
ஒம்/-XXXXXXXXX,
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்
நகல்
1) மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்
2) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்
No comments:
Post a Comment