தொலைநிலைப் படிப்புகளுக்கு செப்.27 முதல் தோ்வுகள் தொடக்கம்:சென்னைப் பல்கலை. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, September 18, 2021

தொலைநிலைப் படிப்புகளுக்கு செப்.27 முதல் தோ்வுகள் தொடக்கம்:சென்னைப் பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உள்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ஆம் ஆண்டு மே மாதம் தோ்வு நடைபெற்றிருக்க வேண்டும். கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தோ்வுக்கால அட்டவணையும் ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்டம்பா் 20-ஆம் தேதி அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment