பணியில் உள்ளவர்களுக்காக சென்னை ஐஐடியில் வழங்கப்படும் பிரத்யேக எம்பிஏ படிப்பில் சேரஆன்லைனில் அக்.19-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பணியில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை ஐஐடியில் எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ (EMBA) என்ற பிரத்யேக எம்பிஏ படிப்பு வழங்கப்படுகிறது. பணியில்இருப்பவர்கள் தங்கள் நிர்வாகத்திறமையை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது
சமூக ஊடகம், இணையவழிவர்த்தகம், சர்வதேச வர்த்தகம்,இணைய பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, டிஜிட்டல் பொருளாதாரம், 21-ம் நூற்றாண்டின் புதிய தொழில்நுட்பங்கள் (இண்டஸ்ட்ரி 4.0)ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பாடத்தில் முதல் வகுப்பு பட்டம் பெற்றவர்கள் இந்த எம்பிஏ படிப்பில் சேரலாம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். நுழைவுத்தேர்வு, இணையவழி நேர்காணல் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இதற்கான வகுப்புகள் வார இறுதிநாட்களில் நேரடியாகவும் இணையவழியிலும் நடைபெறும்.
2022-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 20-ம் தேதி (நேற்று) தொடங்கியது. அக்.19-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://doms.iitm.ac.in/emba/) விண்ணப்பிக்கலாம். வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜன வரியில் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment