பிஆர்க் படிப்புக்கு ஆன்லைனில் செப்.19 வரை விண்ணப்பிக்கலாம்: சென்டாக் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, September 15, 2021

பிஆர்க் படிப்புக்கு ஆன்லைனில் செப்.19 வரை விண்ணப்பிக்கலாம்: சென்டாக்

இளநிலை ஆர்க்கிடெக்ட் (பிஆர்க்) படிப்புக்கு ஆன்லைனில் வரும் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்டாக் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ''நீட் அல்லாத இளநிலை தொழில்முறைப் படிப்பான பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தேர்வர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021- 22ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தை www.centacpuducherry.in மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 19-ம் தேதி மாலை 5 மணியாகும். நீட் அல்லாத தொழில்முறைப் படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் நாட்டா (NATA) மதிப்பெண் அடிப்படையில் தங்கள் தகுதியை மதிப்பிட்ட பிறகு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான விவரம் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்''. இவ்வாறு சென்டாக் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment