தமிழகத்தில் ‘மக்கள் பள்ளி' திட்டம் அக்.18-இல் தொடக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 30, 2021

தமிழகத்தில் ‘மக்கள் பள்ளி' திட்டம் அக்.18-இல் தொடக்கம்

தமிழகத்தில் ‘மக்கள் பள்ளி' திட்டம் அக்.18-இல் தொடக்கம் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் அறிமுகம் சென்னை, செப். 30: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெ ளியைக் குறைப்பதற்காக 'மக்கள் பள்ளி என்ற திட்டம் வரும் அக்.18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்.1-ஆம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடை பெற்று வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி தற்போதுவரை புத்தாக்கப் பயிற்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. இதற்கிடையே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவ.1-ஆம் தேதி முதல் பள் ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி அல் லது கற்றல் இழப்பைக் குறைப்பதற்கு தினசரி ஒன்றிலிருந்து ஒன் றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள் ளும் வகையில் மக்கள் பள்ளி' என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை வரும் அக்.18-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

எந்தெந்த மாவட்டங்களில்...

 இது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் கூறியது: கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி இந்தத் திட்டம் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருச்சி, திண்டுக்கல், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் சோதனை முறையில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. 

இந்தத்திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு பள்ளி நேரத்துக்குப் பிறகு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் செயல்முறைக் கற்பித்தல் வகுப்புகள் நடைபெறும். 

இதைத் தொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களுக்கு திருப்புதல் நடைபெறும். சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்: ஒரு தன்னார்வலர் குறைந்தபட்சம் 15 முதல் 20 வரையிலான மாணவர்களுக்கு வகுப் பெடுப்பார். இந்தத் திட்டத்தில் சிறப்பாக செயல்படும் தன்னார் வலர்களுக்கும், திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக் கும் அரசின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்ப டவுள்ளன. 

இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். 'மக்கள் பள்ளி' திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர். கிராம சபைக் கூட்டத்தில்... தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் அக்.2-ஆம் தேதி சனிக் கிழமை நடைபெறவுள்ளது. 

அப்போது, பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்படவுள்ள கூட்டப் பொருளோடு, ‘மக்கள் பள்ளி திட்டம் குறித்தும் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந் தக் கூட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் என அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டு ‘மக்கள் பள்ளி திட்டத்துக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment