அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக
சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களது அறிக்கை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு ஊழியர்களின் உற்ற
நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் தோழனாக
என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழக
அரசு
செயல்பட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற
அரசுகள் அறிவித்து செயல்படுத்திய, அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்கள்
எண்ணற்றவை; இந்த நாட்டிற்கே வழிகாட்டுபவை.
அந்த வகையில், அண்மையில், பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும்
ஆசிரியர்கள் சங்கங்களைச் சார்ந்த சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வைத்த
கோரிக்கைகளையெல்லாம் பரிசீலித்து, பின்வரும் முக்கிய
அறிவிப்புகளை 110
விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.
(1)
அரசு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி
உயர்வு
குறித்து, நிதிநிலை
அறிக்கையில்
1-4-2022
முதல்
அமல்படுத்தப்படும்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து
வரப்பெற்ற அரசு ஊழியர்கள்
சங்கங்களின் கோரிக்கையினைக்
கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்குக் கடும் நெருக்கடியான நிதிச்
சூழல் இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின்
நலனைக் கருத்தில்கொண்டு, அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத
2
காலத்திற்கு
முன்னதாகவே,
அதாவது,
1-1-2022
முதல்,
அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்
கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இதன்மூலம்
16 இலட்சம்
அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்
பயன்பெறுவார்கள். இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே,
அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால், மூன்று மாத
காலத்திற்குக் கூடுதலாக ஆயிரத்து 620 கோடி ரூபாய் செலவினம்
ஏற்படும். ஆண்டொன்றுக்கு கூடுதலாக 6 ஆயிரத்து 480 கோடி
ரூபாய் செலவாகும்.
(2) சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும்
சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து
60-ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் தற்போது பணியிலிருக்கும்
29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல்
உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.
(3)
அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல்
கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆம் ஆண்டு
இரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல்
கல்வித் தகுதியின்மூலம்
அவர்களுடைய
பணித்திறன்
மற்றும்
அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு,
உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத் தொகை, ஒன்றிய அரசால்
3
அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில்
விரைவில் அறிவிக்கப்படும்.
(4)
அரசுப்
பள்ளிகளில்
காலியாகவுள்ள
இளநிலை
உதவியாளர்
பணியிடங்கள்,
தேவைக்கேற்ப
தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையம் மூலமாக நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
(மேசையைத் தட்டும் ஒலி)
(5) ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில்
வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
(6)
2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு
எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள்
தொடர்பாக, பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தக் காலம்
மற்றும் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தினைப் பணிக்
காலமாக
முறைப்படுத்த
வேண்டுமென கோரிக்கை
வைத்திருக்கிறார்கள்.
இதனைப் பரிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய
வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம்
ஆகியவை
பணிக்
காலமாக
முறைப்படுத்தப்படும்
என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
(7) வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட
ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில்,
(மேசையைத் தட்டும் ஒலி) கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய
முன்னுரிமை
வழங்கப்படும்.
மேலும்,
போராட்டக்
காலத்தில்
அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்.
(மேசையைத் தட்டும் ஒலி)
அந்த ஒழுங்கு நடவடிக்கையின்
காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும்
சரிசெய்யப்படும்.
(8)
பணியில்
இருக்கும்போது
காலமான
அரசுப்
பணியாளர்களின்
வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் அரசுப் பணி பெறுவதில்
உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்கும் வகையிலும், கருணை
அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில்
உள்ள தெளிவின்மையினைச் சரிசெய்யும் வகையிலும் உரிய வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியிடப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
(9) அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்
அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள்
ஆகியோரை அவர்களது வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல்
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும்.
(மேசையைத்
தட்டும்
ஒலி)
மேலும்,
அரசு
ஊழியர்கள்
இத்திட்டத்தின்கீழ் இடர்பாடுகள் எதுவுமின்றி பயன்பெற ஏதுவாக,
அவர்களுக்கு
உதவிடும்
வகையில்
ஒருங்கிணைந்தத்
தனி
தொலைபேசி உதவி மையம் (Help Desk) ஒன்று அமைக்கப்படும்.
(10) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர் சங்கங்களால்
கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர்சிகிச்சைப் பிரிவில் சேர்க்க
வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா
சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்
அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம்
ரூபாயைவிடவும் கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவுத்
தொகை அரசு நிதி உதவியின்கீழ் அனுமதிக்கப்படும்.
(மேசையைத்
தட்டும் ஒலி)
(11) கணக்கு மற்றும் கரூவூலத் துறையின் (IFHRMS) பணிகளை எளிதாக
மேற்கொள்ளும்பொருட்டு, அவற்றைத் துரிதமாகவும், எளிதாகவும்
செயல்படுத்தக்கூடிய வகையில், மாவட்டந்தோறும் பணியாளர்களுக்கு
உரிய பயிற்சி அளிக்கப்படும்.
(12) புதியதாக அரசுப் பணியில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி
உயர்வு பெறும் பணியாளர்களுக்கு, பணி தொடர்பான பயிற்சியினை
அந்தந்த
மாவட்டங்களிலேயே
வழங்குவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படும்.
இதன்மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும்
நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில்
தங்களுக்குரிய தகுதிகாண் பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு
பெறுவது உறுதி செய்யப்படும்.
(13) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால்,
ஆசிரியர் மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப, ஆசிரியர் பணி
நியமனம் மேற்கொள்ளப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிருவாகத்தின்
அடித்தளமாக
விளங்குபவர்கள்
அரசு
ஊழியர்கள். அவர்களது
நலனில்
எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த
அரசு படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்து
அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments:
Post a Comment